Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

உங்க கழுத்து கருப்பா அசிங்கமா இருக்கா? இனி அந்த கவலை வேண்டாம்...

உங்க கழுத்து கருப்பா அசிங்கமா இருக்கா? இனி அந்த கவலை வேண்டாம்...

பொதுவாவே நம்ம உடலில்ல கழுத்துப் பகுதியில் இருக்குற சருமத்தில் கொலாஜன் அளவும், எண்ணெய் சுரப்பிகளும் ரொம்பவே குறைவு. அதனால் தான் முகத்தை விட கழுத்துப் பகுதியில் சுருக்கங்கள், டார்க்னெஸ், வறட்சி மற்றும் கருமையான திட்டுக்கள் போன்ற பிரச்சனைகள் எல்லாம் அதிகமே ஏற்படுது. நம்ம முகத்த அடிக்கடி சுத்தப்படுத்துற மாதிரி கழுத்தையும் அடிக்கடி சுத்தம் பண்ணாம விடுறதால தான் கழுத்துல கழுக்கு அதிகமா சேர்ந்து கருப்பா மாறிடுது. கழுத்துப் பகுதியில் இருக்குற அழுக்குகளை போக வைக்க இயற்கை வழிகள் நிறைய இருக்கு. அந்த வழிகளை தினமும் தவறாமல் செஞ்சுட்டு வந்தாலே போதும், கருப்பா இருக்குற உங்க கழுத்து சீக்கிரமே சுத்தமாகவும், வெள்ளையாகவும் மாறிடும். நம்ம வீட்டில இருக்குற பொருட்களை வச்சே இத செய்ய முடியும்னா அத ஏன் நம்ம ட்ரை பண்ணக்கூடாது? வாங்க வீட்டில இருக்குற பொருளெல்லாம் வச்சு கழுத்துல இருக்குற கருமை, அழுக்கெல்லாம் எல்லாம் எப்படி போக வைக்கலாம்னு இப்ப பார்க்கலாம்…

  1. பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர்

பேக்கிங் சோடாவையும், தண்ணியையும் மிக்ஸ் பண்ணிகோங்க. கழுத்துல கருப்பு, கழுக்கு அதிகமா இருக்குற இடத்துல அந்த மிக்ஸ் தடவி மெதுவா மசாஜ் பண்ணி கொஞ்ச நேரம் ஊற விடனும். அதுக்கப்பறம் நார்மல் வாட்டர்ல கழுவிடலாம். இப்டி ரெகுலரா செஞ்சுட்டு வந்தா நீங்களே நல்ல வித்தியாசத்த பாக்கலாம்…

  1. அரிசி மாவு மற்றும் பால்
    ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவை கொஞ்சம் பால் சேர்த்து கலந்துக்கனும். அதுக்கப்பறம் அதை கழுத்துப் பகுதியில் தடவி மெதுவா மசாஜ் செய்யனும். ஒரு பத்து நிமிசம் ஊற வைச்சு, தணணீல கழுத்தைக் கழுவிடனும். இப்படி வாரத்திற்கு 2 ல இருந்து 3 தடவ செஞ்சுட்டு வந்தாலே போதும், கழுத்து அழுக்கு போய், வெள்ளையா மாறிடும்.

3. தக்காளி கூழ்
ஒரு தக்காளிய எடுத்து சின்ன சின்னதா கட் பண்ணிகோங்க. அத மிக்ஸர் ஜார்ல போட்டு அரைச்சு எடுத்துகோங்க.. அரைச்ச தக்காளி பேஸ்ட் அ கழுத்த சுத்தி தடவி கொஞ்ச நேரம் மசாஜ் செய்யனும். பத்து நிமிடம் அத ஊற வைச்சுட்டு, நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, கழுத்து அழுக்கின்றி இருக்கும்.

4. எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள்
ஒரு சின்ன பௌலில்ல 2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, கொஞ்சம் எலுமிச்சை சாறும் கொஞ்சமா நீர் சேர்த்து பேஸ்ட் செஞ்சுக்கனும். அந்த கலவையை கழுத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து விட்டு, பத்து நிமிடம் ஊற வைச்சு கழுவிடனும். வாரத்திற்கு 2-3 தடவ இத செஞ்சா போதும். இதனால கழுத்து சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும்.

5. பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை
பேக்கிங் சோடா மற்றும் கற்றாழை ஜெல்லை சம அளவில் எடுத்து மிக்ஸ் பண்ணிக்கனும். அதை கழுத்து பகுதியில் தடவி 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய குளிர்ந்த நீரால் கழுத்தைக் கழுவ வேண்டும். இப்படி 2-3 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், கழுத்து சுத்தமாக அழுக்கின்றி இருக்கும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →