Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

செவ்வாய்க்கிழமை அன்னைக்கு இந்த பொருட்களை மட்டும் வாங்கிடாதீங்க...

செவ்வாய்க்கிழமை அன்னைக்கு இந்த பொருட்களை மட்டும் வாங்கிடாதீங்க...

செவ்வாய்க்கிழமை முட்டை சாப்பிடாதீர்கள், செவ்வாய்க்கிழமை நகங்களை வெட்டாதீர்கள், செவ்வாய்க்கிழமை முடி வெட்டாதீர்கள். இதையெல்லாம் நம் வாழ்நாளில் ஒருமுறையாவது பெரியோர்கள் சொல்லி கேட்டிருக்கிறோம். ஆனால், செவ்வாய்க்கிழமையில் நாம் சில பொருட்களை வாங்க கூடாது என்றும் பெரியவர்கள் கூறுவதுண்டு. அதன் அடிப்படை என்ன என்பதைப் பற்றி தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். இதில் உங்கள் எல்லா சந்தேகளுக்குமான பதில்கள் உள்ளன.

மேக்கப் பொருட்கள்
செவ்வாய்க்கிழமைகளில் எந்தவிதமான ஒப்பனை பொருட்களையும் வாங்கக்கூடாது. ஏனெனில் இது திருமணமான தம்பதியினரிடையே அல்லது உறவுகளுக்கு இடையே கூட விரிசலை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரப்படி ஒப்பனை பொருட்கள் வாங்க சிறந்த நாட்கள் என்றால் திங்கள் மற்றும் வெள்ளி தான். உங்கள் மனைவி அல்லது காதலிக்கு ஏதாவது பரிசளிக்க நீங்கள் திட்டமிட்டால், செவ்வாய்க்கிழமை அன்று ஒப்பனை பொருட்கள் வாங்காமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால், அவருடைய பிறந்தநாளுக்குப் பிறகோ அல்லது அதற்கு முந்தைய நாளோ பரிசளிக்கலாம்.

கருப்பு நிற ஆடைகள்
செவ்வாய்க்கிழமை கருப்பு ஆடைகளை அணிவது மட்டுமல்ல, செவ்வாய்க்கிழமை கருப்பு நிற ஆடைகளை வாங்கவும் கூடாது. மங்கல்வாரம் என்றழைக்கப்படும் செவ்வாய்க்கிழமை அன்று கருப்பு நிற ஆடைகளை வாங்குவது துரதிர்ஷ்டத்தையும், எதிர்மறை ஆற்றலையும் ஈர்க்கக்கூடும். அதுமட்டுமின்றி, சனி பகவானையும் இது ஈர்க்குமாம். எனவே, செவ்வாய்க்கிழமை அன்று நன்மை கிடைக்க வேண்டுமெனில், சிவப்பு நிற ஆடைகளை அணியவும்.

இரும்பு பொருட்கள்
நகவெட்டி, கத்தரிக்கோல் போன்ற இரும்பு அல்லது இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களை செவ்வாய்க்கிழமையன்று வாங்கக்கூடாது. செவ்வாய்க்கிழமையன்று இரும்பு பொருட்களை வாங்குவது உடல் உபாதைகளை உண்டாக்கும். எனவே, இரும்பினால் ஆன பொருட்களை செவ்வாய்க்கிழமை அன்று மறந்தும் வாங்கி விடாதீர்கள்.

யாகத்திற்கான பொருட்கள்
ஜோதிடர்களின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமைகளில் யாகம், ஹோமம் போன்றவற்றை செய்யவே கூடாது. அதுமட்டுமல்ல யாகத்திற்கு தேவையான பொருட்களைக் கூட செவ்வாய்க்கிழமை அன்று வாங்கக்கூடாது. மேலும், நீங்கள், ஹோமம் செய்கிறீர்கள் என்றால், அதனை மதியத்திற்கு முன்பு முடித்துவிடுவதை உறுதி செய்து கொள்ளவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →