Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

மாதவிடாய்க்கு முன்பு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கா? அப்ப அலட்சியமா விடாதீங்க...

மாதவிடாய்க்கு முன்பு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கா? அப்ப அலட்சியமா விடாதீங்க...

மாதத்தில் அந்த 3 நாட்கள் மட்டும் வரவே கூடாது என்பது பெண்கள் பலரின் விருப்பமாக இருக்கும். அந்த நாட்களில் ஏற்படக்கூடிய வலி மற்றும் அசௌகரியம் தான் இதற்கு காரணம். இதைக் காட்டிலும், மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தான் பெரும் அவதியாக இருக்கும். ஒரு சிலருக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கக்கூடும். இது பலருக்கு ஏற்படக்கூடிய பிரச்சனையாக இருந்தாலும், இது தொடரும் பட்சத்தில் அலட்சியமாக விட்டு விடக்கூடாது. அதற்கான உரிய சிகிச்சையைப் பெற வேண்டியது அவசியம். இந்த கட்டுரையில் மாதவிடாய் காலத்திற்கு முந்தைய காலத்தில் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான காரணங்க்ள, அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைக்களைப் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்…

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கான காரணங்கள்

  • பாக்டீரியல் தொற்று மாதவிடாய்க்கு முன்பு வெள்ளைப்படுதல் பிரச்சனையை ஏற்படுத்தும். பாக்டீரியா தொற்று பிரச்சனை வராமல் இருக்க சுத்தத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பல சமயங்களில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லாத காரணத்தால் மாதவிடாய்க்கு முன்பு வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படும். ஆம், இதன் காரணமாக, நார்ச்சத்து மற்றும் சர்க்கரை நிறைந்த உணவை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். அதனால் அதுபோன்ற சமயங்களில் நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • ஈஸ்ட் நோய்த்தொற்றின் அறிகுறிகள் தென்பட்டால், மாதவிடாய்க்கு முன்பு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கலாம். ஈஸ்ட் தொற்று ஏற்பட்டால், வெள்ளைப்படுதல் பிரச்சனையானது வெள்ளையாகவும் தடிமனாகவும் வெளியேறும்.
  • மனஅழுத்தம் இருந்தால், மாதவிடாய் வருவதற்கு முன்பு வெள்ளைப்படுதல் பிரச்சனை வரலாம். அத்தகைய சூழ்நிலையில், மன அழுத்தத்தைத் தவிர்க்க, நீங்கள் சுவாசப்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றின் உதவியை நாடலாம்.
  • அதுமட்டுமின்றி, அடிக்கடி கருக்கலைப்பு செய்வதால் கூட மாதவிடாய்க்கு முன்பு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கலாம். எனவே, கர்ப்பத்தைத் தவிர்க்க நீங்கள் கருத்தடை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்துவது நல்லது.

மாதவிடாய்க்கு முந்தைய வெள்ளைப்படுதலின் அறிகுறிகள்

  • பெண்ணுறுப்பில் இருந்து வெளியேறும் வெள்ளை நீர்
  • தலைசுற்றல்
  • தலைவலி
  • உடற்சோர்வு
  • பிறப்புறுப்பில் அரிப்பு
  • உடல் பலவீனம்
  • பிறப்பிறுப்பில் துர்நாற்றம் வீசுதல்

வெள்ளைப்படுதலுக்கான சிகிச்சை

  • உங்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால், இஞ்சியைப் பயன்படுத்தலாம். உண்மையில், இஞ்சி சாற்றை நீரில் கலந்து குடிப்பது வெள்ளைப்படுதல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற உதவும்.
  • வெள்ளைப்படுதல் பிரச்சனையைத் தவிர்க்க, வெதுவெதுப்பான நீரில் டீ ட்ரீ ஆயிலை கலந்து, அந்த தண்ணீரைக் கொண்டு பிறப்புறுப்பைச் சுத்தம் செய்யலாம்.
  • பருவகால காய்கறிகளை ஜூஸ் போட்டு குடித்தாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனையைத் தவிர்த்திடலாம்.
  • வெள்ளைப்படுதல் பிரச்சனையைத் தவிர்க்க, அந்த பகுதியை சுத்தமாக வைத்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். தேவை என உணர்ந்தால், உள்ளாடைகளை நாளொன்றிற்கு இரண்டு முறை மாற்றலாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →