Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

புதாதித்ய யோகத்தால் பேரதிர்ஷ்டத்தை தங்கள் வசப்படுத்த போகும் ராசிக்காரர்கள்...

புதாதித்ய யோகத்தால் பேரதிர்ஷ்டத்தை தங்கள் வசப்படுத்த போகும் ராசிக்காரர்கள்...

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை ஒன்பது கிரகங்களின் நிலைகளை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகிறது. அதிலும், ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தை ஒரே ராசியில் சந்திக்கும் போது ஒரு யோகத்தை உருவாக்கும். இந்த நிலை சிலருக்கு மிகவும் சாதகமானதாக அமையக்கூடும். அப்படி, ஜூலை மாத தொடக்கத்தில் புதன் பகவான் மிதுன ராசிக்குள் நுழைந்துள்ளார். சூரியன் ஏற்கனவே மிதுன ராசியில் இருக்கிறார். எனவே, சூரியனும் புதனும் ஒரே ராசியில் அதாவது மிதுன ராசியில் இருப்பதால் புதாதித்ய யோகம் உருவாகியிருக்கிறது. ஜோதிடத்தில் புத்தாதித்ய யோகம் என்பத மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு புதாதித்ய யோகம் வரப்பிரசாதமாக அமையப் போகிறது. இப்போது இந்த கட்டுரையில் புதாதித்ய யோகத்தால் அதிர்ஷ்டத்தை தங்கள் வசப்படுத்தி கொள்ள போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்…

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புதாதித்ய யோகத்தால் சுப பலன்கள் கிடைக்கும். தேவி மகா லட்சுமியின் சிறப்பு ஆசிகளை நீங்கள் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு தாங்கள் செய்யும் அனைத்து வேலையிலும் வெற்றி கிட்டும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வணிகர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் எதிர்பார்த்த லாபம் சிறப்பாக கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை சிறப்பாக செலவிடுவீர்கள்.

இந்த ஒரு டீ குடிச்சா போதும் சைனஸ் முதல் வாயு தொல்லை வரை எல்லாத்தையும் விரட்டிடலாம்…

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதாதித்ய யோகம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். திடீர் பண வரவும் எதிர்பார்த்ததிற்கு மேலாக லாபமும் இருக்கும். இதன் காரணமாக உங்களின் நிதி பக்கம் மிகவும் வலுவாக இருக்கும். மேலும், மகா லட்சுமியின் பரிபூரண அருளை பெறுவீர்கள். திருமண வாழ்க்கையில் நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பும் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையோருக்கும் இந்த யோகம் வரப்பிரசாதமாக அமையும். வெற்றிக்கு மேல் வெற்றியைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் எந்த குறையும் இல்லாமல் சிபறப்பாக வாழ முடியும். உங்கள் வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிப்பதோடு, மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். மகா லட்சுமியின் அருளால் செல்வமும் லாபமும் உண்டாகி சிறப்பாக வாழ்வை பெறுவீர்கள். மகிழ்ச்சியும் வளமும் பெருகும். சமூகத்தில் உங்களின் மரியாதை பன்மடங்கு உயரும். பிறருக்கு உதவவும் வாய்ப்பு கிடைக்கும்.

முகத்தில் வழியும் எண்ணெய் பசையைப் போக்க தேனுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க…

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் புதாதித்ய யோகத்தால் சுப பலன்களைப் பெறுவார்கள். பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். வணிகர்கள் புதிய வேலையைத் தொடங்க நினைத்தால் இந்த நேரம் நல்ல நேரமாக அமையும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல லாபத்தைப் பெற்றிடலாம். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமானதாக இருக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகா லட்சுமியின் சிறப்பு அருளும் உங்களுக்கு கிட்டும். குடும்பத்தால் சந்தோஷம் நிலைத்திருக்கும். புது உறுப்பினர் வருகையால் மகிழ்ச்சி இரட்டிப்பாகலாம்.

கும்பம்

மகா லட்சுமியின் அருளால் கும்ப ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். உங்களின் எந்தவொரு செயலிலும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பண வரவும், புதிய லாபமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் கௌரவம் மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கல்வித்துறையில் தொடர்புடையவர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் சுப பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய வெற்றி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து நற்பெயரைப் பெறுவீர்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,030
தங்கம் (24k)
1 கிராம்
₹13,682
வெள்ளி
1 கிராம்
₹240

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →