Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

கோபம் ஒரு மனுசனை கெட்டவனா மட்டுமில்ல, குண்டாவும் மாத்திடுமாம்… இது படிங்க என்ன சொல்றேனு புரியும்…

கோபம் ஒரு மனுசனை கெட்டவனா மட்டுமில்ல, குண்டாவும் மாத்திடுமாம்… இது படிங்க என்ன சொல்றேனு புரியும்…

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதாவது ஒரு சூழ்நிலையில் கோபப்பட வேண்டியது இருக்கும். நண்பர்களிடமோ, குழந்தைகளிடமோ, பெற்றோரிடமோ அல்லது சக மனிதரிடமோ கோபப்பட்டிருப்போம். கோபப்படுவது தவறு தான், இருந்தாலும் அதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே பலரது புலம்பலாக இருக்கும். கோபப்படுவது சூழ்நிலை காரணமாக இருந்தாலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அறிந்துல் இனி கோபப்பட யோசிப்பீர்கள். வாருங்கள் கோபத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்…

அதிகப்படியான கோபம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்

கோபத்தின் அறிகுறிகள் என்றால், முகம் மற்றும சிவப்பது, உடல் நடுக்கம், வியர்சை போன்றவை. இவற்றை வைத்தே ஒருவர் கோபப்படுவதை நம்மால் உணர முடியும். இதநத மாற்றங்களுக்கு காரணம் என்னவென்றால், அட்சினலின், சி.எச்.ஆர். மற்றும் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் தான். கோபப்படும் போது மூளை இந்த ஹார்மோன்களை வெளியிடும். அப்போது உடலுக்கு அதிகப்படியான ஆற்றல், அதிகப்படியான இரத்த ஓட்டம் போன்ற மாற்றங்கள் ஏற்படும்.

பசி அதிகரிக்கும்

கோபத்தை ஏற்படுத்தும் காரணிகள் குறைந்ததும், உடலில் இருக்கும் கார்டிசோல் ஹார்மோனால், அட்ரினலின் ஹார்மோன் குறையத் தொடங்கும். அப்போது பசி தூண்டப்படும். இதனால் தான், கோபப்பட்டாலோ அல்லது வருத்தப்பட்டலோ பசி எடுக்கிறது. இது ஆரோக்கியமானது இல்லை தான். இருப்பினும், இது உடலை அமைதி அடைய செய்திடும்.

வயிறு, இடுப்பு பகுதியில் கொழுப்பு சேரும்

கோபத்தால் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன் உடலின் மெட்டபாலிசத்தை தடுத்திடும். எனவே, கோபப்பட்ட பிறகு நாம் சாப்பிடும் உணவானது ஆற்றலாக மாறாமல், வெறும் கோபத்தை தணிக்கும் ஒரு பொருளாகவே மட்டுமே அமைந்துவிடும். அதனால் தான், கொழுப்பு சேருகிறது.

கோபத்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்க செய்ய வேண்டியது

அதிகப்படியான கோபத்தில் இருக்கும் போது எதையும் செய்ய முடியாது என்பதால், கோபம் தணிந்த பிறகு இங்கே கொடுக்கப்பட்டுள்ளதை மறக்கால் செய்யுங்கள். உடல் எடை அதிகரிப்பதை எளிமையாக தடுத்திடலாம்.

*ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். இது கோபத்தை தணிய செய்வதோடு, பசியையும், தடுத்திடும்.

*கோபத்தால் பசி ஏற்பட்டால், நொறுக்கு தீனி, ஜங்க் ஃபுட் போன்றவற்றை சாப்பிடாமல், கலோரிகள் குறைந்த உணவு எதையாவதை சாப்பிடவும். இதன்மூலம், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேருவதை தவிர்த்திடலாம்.

*ஆழமாக மூச்சை உள்வாங்கி, மெதுவாக வெளியே விடவும். பின், 2 நிமிடங்களுக்கு கண்களை மூடி அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்தோ அல்லது நின்றோ விடவும். இது இரத்த அழுத்தத்தை சீராக்கிட உதவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →