Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

நீங்க அடிக்கடி நகம் கடிப்பீங்களா? அப்ப உங்க பல்லுக்கு ரொம்ப ஆபத்து…

நீங்க அடிக்கடி நகம் கடிப்பீங்களா? அப்ப உங்க பல்லுக்கு ரொம்ப ஆபத்து…

நகம் கடிக்கும் பழக்கம் உடையவர்களது பற்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? நகர் கடிப்பது என்பது பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு பழக்கம். இந்த பழக்கமானது, மனஅழுத்தம், பதற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் ஒருவருக்கு வரக்கூடும். உங்களுக்கு இந்த பழக்கம் இருந்தால் உடனே அதை எப்படி தவிர்ப்பது என்பதைப் பற்றி ஆராயுங்கள். ஏனெனில், நகர் கடிப்பது உங்கள் வாயின் ஆரோக்கியம் மற்றும் பற்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமாம். எந்த வகையில் நகம் கடிப்பது உங்கள் பற்களை பாதிக்கும் என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

 

நகம் கடிப்பதால் பற்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

 

பற்கூச்சம்

 

தொடர்ச்சியாக நகம் கடிக்கும் பழக்கமுடையவர்களின், பற்களில் இருக்கக்கூடிய எனாமலானது தேய்ந்திடும். இதன் விளைவாக, பற்கூச்சம் உண்டாகும். பற்கள் வலுவிழந்து போன்றும் உணரலாம்

 

பற்களுக்கிடையே இடைவெளி

 

தொடர்ச்சியாக கை விரலின் நகங்களைக் கடிப்பதன் விளைவாக, உங்கள் பற்களின் அமைப்பே காலப்போக்கில் மாறவிடலாம். இதனால், பற்களுக்கிடையே இடைவெளிகள் ஏற்படுவது அல்லது மாலோக்ளூஷன் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும்

 

பற்களில் விரிசல்

 

நீங்கள் அடிக்கடி நகங்களைக் கடிக்கிறீர்கள் என்றால், பற்களுக்கிடையேயான உராய்வு அதிகமாக இருக்கும். இதனால், உங்கள் பற்களில் விரிசல் ஏற்படலாம் அல்லது பாதி உடைந்து போவதற்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது

 

ஈறு நோய்

 

கை விரலின் நகங்களை அடிக்கடி கடிக்கும்போது, நக இடுக்குகளில் இருக்கக்கூடிய அழுக்குகள் மற்றும் கிருமிகள் வாயில் சேருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதனால் ஈறு சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் உருவாகலாம்

 

ப்ரூக்ஸிசம்

 

நகம் கடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு ப்ரூக்ஸிசம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ப்ரூக்ஸிசம் என்பது தூக்கத்தில் உங்களை அறியாமல் பற்களை கடிக்கும் பழக்கமாகும். இதனால், பல் எனாமல் தேய்மானம், பற்சிதைவு மற்றும் தாடை வலி போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்

 

குறிப்பு

 

நீங்கள் நகம் கடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டுமெனில், நகங்களை வளர விடாமல் அடிக்கடி வெட்டுங்கள் அல்லது கையுறை அணியுங்கள். இதை தடுக்க முடியாவிட்டால் உடனே மருத்துவ நிபுணரை சந்தித்து உரிய ஆலோசனை பெற வேண்டியது அவசியம்

 

 

 

உடல் எடை குறைக்கனும்னா மதியம் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…
வெறும் வயிற்றில் இந்த இலையோட ஜூஸ் குடிச்சீங்கனா சிறுநீரக பிரச்சனை வரவே வராதாம்…
இந்த ஒரு டீ குடிச்சா போதும் சைனஸ் முதல் வாயு தொல்லை வரை எல்லாத்தையும் விரட்டிடலாம்…

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →