Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

அதிகப்படியான வியர்வைக்கு இது கூட காரணமா இருக்கலாம். உடனே இத ட்ரை பண்ணுங்க...

அதிகப்படியான வியர்வைக்கு இது கூட காரணமா இருக்கலாம். உடனே இத ட்ரை பண்ணுங்க...

கோடை காலத்தில் வியர்வை வருவது மிகவும் சகஜமான ஒன்று. ஏனென்றால், வியர்வை என்பது உடலின் இன்றியமையாத செயல்களில் ஒன்றாகும். இதனால் உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமத்தில் இயற்கையான பொலிவும் உண்டாகும். ஆனால் சிலருக்கு அளவிற்கு அதிகமாக வியர்க்கும். எந்த நோயும், உடல் உழைப்பும், உஷ்ணமும் இல்லாமலேயே வியர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் சுரப்பிகள் அதிகமாக செயல்படும் போது இந்த சில பிரச்சனைகளை ஏற்படுகிறது.

 

வழக்கத்தை விட அதிகமாக வியர்ப்பது ஹைப்பர்ஹைட்ரோசிஸ் காரணமாக ஏற்படலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை சுரப்பிகள் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். இதனாலேயே இவர்களுக்கு கை கால்கள் வியர்க்க ஆரம்பிக்கும். ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நோய் இரண்டு வகைகள் உள்ளன. நிபுணத்துவ மதிப்பாய்வின்படி, சுமார் 3% மக்கள் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அதிகப்படியான வியர்வைகான் இரண்டு காரணங்கள்

 

முதன்மை காரணம்

 

எந்த நோயும் இல்லாமல் அதிக வியர்வை ஏற்பட்டால், அதை வெளியேற்றும் சுரப்பிகள் அதன் பின்னணியில் உள்ளன. இந்த சுரப்பிகள் சுறுசுறுப்பாக இருக்கும்போது, ​​உடல் இயல்பை விட அதிகமாக வியர்க்கத் தொடங்குகிறது.

 

இரண்டாவது காரணம்

 

ஒருவர் தைராய்டு சுரப்பி கோளாறு, சர்க்கரை நோய், மாதவிடாய், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி மற்றும் இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும்போது அதிகப்படியான வியர்வை உண்டாகக்கூடும்.

 

 

அதிக வியர்வை தவிர்க்க இவற்றை பின்பற்றுங்கள்

 

  • காரமான உணவு மற்றும் புளிப்பு உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  • சூடான உணவுகளை உணவில் சேர்க்க வேண்டாம்.
  • ஊறவைத்த 10 உலர் திராட்சையை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
  • உணவில் அதிக துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்ட உணவுகளை உண்ணுங்கள்.

 

இந்த பானங்களைப் பருகலாம்

 

மல்லி தண்ணீர்

 

கொத்தமல்லி விதைகளை அரைத்து இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

 

வெட்டிவேர் தண்ணீர்

 

கோடையில் வியர்வை பிரச்சனை அதிகமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், சாதாரண தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக, நீங்கள் வெட்டிவேர் நீரைக் குடிக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் வெட்டிவேரை 2 லிட்டர் தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். அதன் பின்னர் இந்த நீரை வடிகட்டி குடிக்கவும்.

 

எலுமிச்சை, உப்பு தண்ணீர்

 

எலுமிச்சை மற்றும் உப்பு கலவையானது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. வியர்வையால், உடலில் உப்பு இழப்பு ஏற்படக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், குளிர்ந்த நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடிப்பது அதிக வியர்வை பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும்.

 

 

அதிகப்படியான வியர்வைக்கான வீட்டு வைத்தியங்கள்

 

ஆப்பிள் சீடர் வினிகர்

 

ஆப்பிள் சீடர் வினிகரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளதால் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களைக் கட்டுப்படுத்த உதவும். இதனால், இரவில் ஏற்படும் வியர்வை பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. எனவே, ஒரு தினமும் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கவும்.

 

வைட்டமின் ஈ

 

வைட்டமின்-ஈ வியர்வை பிரச்சனையில் இருந்து விடுபட பெரிதும் உதவுகிறது. வெஜிடபிள் எண்ணெய் மற்றும் பருப்புகளில் வைட்டமின்-ஈ உள்ளது. வைட்டமின் ஈ வெப்பம் மற்றும் இரவு நேரத்தில் ஏற்படும் வியர்வையை 35-40% தூண்டுகிறது. எனவே, உங்கள் உணவில் வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்

 

ஆளி விதைகள்

 

ஆளி விதையில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது வியர்வை பிரச்சனையை நீக்கிட உதவும். இது தவிர, வியர்வையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களையும் இது கட்டுப்படுத்துகிறது. ஆளிவிதையில் உள்ள கூறுகள் உடலில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. இதன் காரணமாக வியர்வை பிரச்சனைக் குறைகிறது.

 

அஸ்வகந்தா

 

அஸ்வகந்தா தலைவலி, மன அழுத்தம் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு சிறந்த சிகிச்சையாகும். இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இது மாதவிடாய் அறிகுறிகளைக் குறைக்கிறது. இதனால் வியர்வை சிக்கலைக் குறைக்கிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவைக் குறைத்து, வியர்வைப் பிரச்சனையை நீக்குகிறது. எனவே, அஸ்வகந்த பொடியைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வியர்வைப் பிரச்சனையைக் குறைத்திடலாம்.

 

டீ பேக்

 

அதிகப்படியான வியர்வை காரணமாக, உடல் துர்நாற்றம் அதிகமாக வீசக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு பாத்திர நீரில் 4 முதல் 5 டீ பேக்குகளை போட்டு சிறிது நேரம் ஊற விடவும். அதன் பிறகு, இந்த நீரை குளிக்க பயன்படுத்தலாம். இப்படி தினமும் செய்து வந்தால், அதிக வியர்வைப் பிரச்சனை நீங்கும். இது தவிர கோடை காலத்தில் பருத்தி ஆடைகளை அணியலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்களும் வியர்வைப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

 

 

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,030
தங்கம் (24k)
1 கிராம்
₹13,682
வெள்ளி
1 கிராம்
₹240

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →