Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

மாத ராசிபலன் (ஏப்ரல் 2022): இந்த மாதம் உங்க ராசிக்கு எப்படி இருக்க போகுதுனு தெரியுமா?

மாத ராசிபலன் (ஏப்ரல் 2022): இந்த மாதம் உங்க ராசிக்கு எப்படி இருக்க போகுதுனு தெரியுமா?

2022 ஏப்ரல் மாதத்தில் பல கிரகங்களின் ராசி மாற்றம் நிகழவிருக்கிறது. ஒவ்வொரு கிரக பெயர்ச்சியும் அனைத்து 12 ராசிகளிலும் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டாக்கக்கூடும். அந்த வகையில், 2022 ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் கிரகங்களின் நிலை மாற்றத்தால் ஒவ்வொரு ராசிக்கான ஜாதகம் மதிப்பிடப்படும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, பல ராசிக்காரர்கள் ஏப்ரல் மாதத்தில் நல்ல செய்திகளைப் பெறலாம், சில ராசிக்காரர்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, இந்த ஏப்ரல் மாதம் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த கட்டுரையை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களின் நிதி நிலை ஏப்ரல் மாதத்தில் வலுப்பெற போகிறது. தொழிலதிபர்கள் தங்கள் கடின உழைப்பால் வருமானத்தைப் பெருக்கலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலை பளுவால் மிகவும் சுமையாக உணரலாம். சக ஊழியர்கள் உங்களுக்கு தீங்கு விளைவிக்க ஏதேனும் முயற்சி செய்யலாம். எனவே, அலுவலக அரசியல்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்
ஏப்ரல் மாதத்தில் உங்கள் குடும்பத்தில் சில சிரமங்கள் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் மற்றும் முதலாளியின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையில் திடீர் முன்னேற்றம் சாத்தியமாகும். அரசு ஊழியர்கள் தங்கள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் நீதிமன்றங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். மேலும், உங்கள் வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை கணிசமாக அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தற்போதைய வேலையில் திருப்தியில்லாமல் இருந்து நீங்கள் வேலையை மாற்ற திட்டமிட்டால், அதைத் தற்காலிகமாக ஒத்திவைக்கவும். பண விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய காலமிது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நிலத்தில் முதலீடு செய்திருந்தால் நல்ல லாபம் கிடைக்கும். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உண்டாகலாம். போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு இந்த காலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு மிக சிறப்பாக இருக்கும். இருப்பினும், இந்த மாதம் ஏதோவொரு விஷயத்தில் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கை இந்த மாதம் மிக மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், இந்த மாதம் உங்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. இந்த நேரத்தில் நீங்கள் அலுவலக வேலையில் புதிய பொறுப்புகளைப் பெறலாம். அரசு ஊழியர்களின் பெயரைக் கெடுக்க கண்ணுக்கு தெரியாத எதிரிகள் முயற்சிப்பீர்கள். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.

கன்னி
இந்த நேரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு சொத்து, வாகன சுகம் கிடைக்கும். உங்கள் கௌரவம் உயரும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடு செய்திருந்தால் இந்த காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத் தொழிலில் உங்கள் கூட்டாளியின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

துலாம்
குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். நீங்கள் கூட்டு வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் கூட்டாளரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். பங்குச்சந்தையில் லாபம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு, அவர்களது வாழ்க்கைத் துணைக்கான தேடல் முடிவுக்கு வரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களை சக ஊழியர்கள் துன்புறுத்த முயற்சி செய்யலாம். அரசு தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திருமணமானவர்களுக்கு, அவர்களது வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களே இந்த மாதம் முழுவதும் உங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்தி கொள்வது நல்லது. உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்த இந்த மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். படிப்பை முடித்து வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும், இந்த நேரத்தில் உங்களுக்கு ஏதாவது ஒரு மன அழுத்தம் ஏற்படலாம்.

மகரம்
உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய காலமிது. தொழிலதிபர்களுக்கு வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். அனைவரின் ஒத்துழைப்பாலும் சிறந்த காலமாக இது இருக்கும். உங்களின் நீண்ட கால கடின உழைப்புக்கு ஏற்ற பலன் இந்த மாதம் நிச்சயம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசினால், உறவுகள் வலுவடையும். குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். நிதி ரீதியாக இந்த மாதம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் ஏமாற்றம் மனசோர்வை ஏற்படுத்தும். இந்த மாதம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களின் வீட்டில் சுப நிகழ்ச்சி ஏதேனும் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால், வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. உங்களுக்கு இருந்துவந்த பழைய பிரச்னைகளுக்கும் இந்த மாதத்தில் தீர்வு கிடைக்கும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலக் குறைவால் மன சோர்வு ஏற்படலாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →