Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
சமையல்

ராகி மசாலா ரொட்டி!!!

ராகி மசாலா ரொட்டி!!!

வீட்டில் தினமும் என்ன சமைப்பது என்ற பெரிய கேள்வி தான் அனைத்து இல்லத்தரசிகளின் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும். அனைவருக்கும பிடித்த உணவை தினமும் செய்து தர வேண்டும் என்ற ஆசையும் ஒரு புறம் இருக்கும. இதில் முக்கிய இடத்தை பிடிப்பவர்கள் குழந்தைகள் தான். அவர்களுக்கு ஆரோக்கியமான, அதே சமயம் பிடித்தமான உணவை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். அந்த வகையில், இப்போது ராகி மசாலா ரொட்டி எப்படி செய்வதென்று பார்ப்போம். செய்வதும் சுலபம் மற்றும் அப்படியே சாப்பிடலாம். இதற்கென தனி சைடு டிஷ் எல்லாம் செய்ய தேவையில்லை. தயிர் மற்றும் ஊறுகாய் போதுமானது. வாருங்கள் இப்போது செய்முறையை பார்க்கலாம்…

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – 1 கப்

ராகி மாவு – ½ கப் (அடுப்பில் சிறிது நேரம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்)

உப்பு – சுவைக்கேற்ப

ஓமம் – ½ டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

சீரகத்தூள் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் – தேவையான அளவு (ரொட்டி சுடுவதற்கு)

தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை:

*மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். தேவையான அளவு நீர் ஊற்றி மிருதுவான சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

*மாவு தயாரானதும் 15 நிமிடங்களுக்கு மூடி வைத்து ஊற விடவும்.

*இப்போது, பிசைந்து வைத்துள்ள மாவை சரிசம அளவில் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ரொட்டிகளை தேய்த்து கொள்ளவும்.

*அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடானதும், தேய்த்து வைத்துள்ள ரொட்டிகளை இரு புறமும் எண்ணெய் தடவி போட்டு எடுக்கவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

தமிழ்நாட்டின் சுவைமிகுந்த சமையல் கலை: சிறந்த உணவுகளின் ஒரு முழுமையான பார்வை வாசிக்க →