Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
பயணம்

அமானுஷ்யம் நிறைந்த இந்திய நெடுஞ்சாலைகள்...

அமானுஷ்யம் நிறைந்த இந்திய நெடுஞ்சாலைகள்...

உலகம் முழுவதும் பேய்களை நம்புபவர்கள் எப்படி அதிகமோ, அதே போல் நம்பாதவர்களும் அதிகமாகவே இருக்கின்றனர். இருப்பினும், இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போவது, அமானுஷ்ய விஷயங்கள் அதிகமாக நடைபெறுவதாக மக்களால் சொல்லப்படும் நெடுஞ்சாலைகள் பற்றி தான். இந்த சாலைகளில் செல்லும் போது திடீர் விபத்துக்கள், அமானுஷ்ய செயல்கள் நடைபெறுவதாகவும் சொல்லப்படுகின்றன. உண்மையிலேயே பலர் இந்த சாலைகளில் இரவு நேரங்களில் செல்வதை விரும்புவதில்லை. வாருங்கள், அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை

சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயத்தை அடைய NH 209 வழியாக தான் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் ஆட்சியில் இருந்த இந்தப் பகுதி வீரப்பன் இறந்ததில் இருந்து அவனது ஆன்மா இங்கேயே அலைந்து கொண்டிருக்கிறது என்ற கதை பரவலாக கூறப்படுகிறது. இப்போதும் நீங்கள் NH 209 இல் சென்றால், நிச்சயமாக நிழல் உருவத்தை உணருவீர்கள் என்று சொல்லப்படுகிறது. அதுதவிர, இந்த வழியில் செல்லும் போது சிரிப்பு, அலறல் சத்தமும் கேட்பதாக கூறப்படுகிறது.

டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை

இந்த நெடுஞ்சாலையில் செல்லும் போது பாங்கர் கோட்டை அமானுஷ்ய சக்திகள் நிறைந்ததாக நம்பப்படுகிறது. இந்தியாவின் பேய்கள் அதிகம் உள்ள இடங்களில் ஒன்றாக பங்கார் கோட்டை கூறப்படுகிறது. மேலும், இந்த நெடுஞ்சாலையில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் பயங்கரமான சம்பவங்களை அனுபவித்ததாக கூறுகின்றனர். இந்த சாலையில் செல்லும் போது மிக கவனமாக செல்ல வேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது.

கிழக்குக் கடற்கரைச் சாலை

சென்னையையும் புதுச்சேரியையும் இணைக்கும் 2-வழி கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதிக அளவில் பேய் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் சாலைகளில் ஒன்று. இந்த சாலை தொடர்பான ஒரு பேய் கதை மிகவும் பயங்கரமாக இருக்கிறது. அந்த வழியாகச் சென்றவர்கள் வெள்ளைப் புடவை அணிந்த பெண் ஒருவரைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள். அதே நேரத்தில், சில நேரங்களில் இந்த பெண் சாலையில் செல்லும் காரின் முன்பு வருவதால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாகவும் சொல்லப்படுகிறது.

கெசாடி காட்

கெசாடி காட் பேய்கள் நிறைந்த நெடுஞ்சாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மும்பை மற்றும் கோவாவை இணைக்கும் இந்த நெடுஞ்சாலைகளில் கார் அல்லது பேருந்து திடீரென கவிழ்வது அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாக கூறப்படுகிறது. அதேசமயம், இதை அனைத்தையும் ஒரு நபர் செய்கிறார் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். இரவில் கார் அல்லது பேருந்தை நிறுத்த அந்த நபர் அடிக்கடி முயற்சிப்பார் என்றும் கூறப்படுகிறது. எனவே, இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

தம்ஹினி காட்

மகாராஷ்டிராவில் உள்ள தம்ஹினி காட் கொலை, திருட்டு மற்றும் அசாதாரண சம்பவங்களுக்கு பெயர் பெற்றது. இங்கே அடிக்கடி ஏற்படும் விபத்துகள் காரணமாக, இந்த மலைப்பாதை பல ஆண்டுகளாக பேய்கள் இருக்கும் பகுதியாக நம்பப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வழியாக பயணிக்கும் மக்களில் பலரது உயிரை பேய் காவு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற அமானுஷ்யம் நிறைந்த சாலைகளில் செல்லும் போது யாருக்கும் லிப்ட் கொடுக்காமல் இருப்பது நல்லது என்று சொல்கின்றனர்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்கள்: குறைந்த செலவில் ஒரு சொர்க்கப் பயணம்! வாசிக்க →