Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

2022ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்...

2022ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்...

2022ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 30ம் தேதி நிகழவிருக்கிறது. இந்த சூரிய கிரகணம் மேஷ ராசியின் நிகழ்ந்தாலும் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமானதாகவும் இருக்கும். அந்த வகையில் இந்த சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கப் போகிறது. அதுதவிர, சூரிய கிரகணத்தன்று சனிக்கிழமையும், அமாவாசையும் சேர்ந்து வருகிறது. இந்த யோகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுசமயம், இதற்கு முந்தைய நாள் சூரியன் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். எனவே, இந்த சூரிய கிரகணம் சிலருக்கு நன்மைகளை வழங்கினாலும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமான பலனையே தரப்போகிறது. அந்த வகையில், இந்த சூரிய கிரகணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் மற்றும் சூரிய கிரகணத்தின் தீய விளைவுகளில் இருந்து தப்பிக்க உதவும் வழிமுறைகளை பற்றியும் இந்த கட்டுலையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

மேஷம்
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷ ராசியில் நடைபெறுகிறது. எனவே, இது உங்கள் ராசிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகலாம். எதிரிகளின் ஆதிக்கம் இந்த நேரத்தில் மேலோங்கி இருக்கும். இதுதவிர, இந்த நேரத்தில் வாகனத்தைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருங்கள். இல்லையெனில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சூரிய கிரகணத்தின் போது பயணம் செய்வதை முற்றிலும் தவிர்த்திடுவது நல்லது.

கடகம்
கடகத்தை ஆளும் கிரகம் சந்திரன். அப்படி இருக்கையில், சூரிய கிரகணத்தின் போது சந்திரன் ராகுவுடன் மேஷ ராசியில் இருப்பார். இந்த நிலை கடக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். இனம் புரியாத பயம் மற்றும் எதிர்மறை எண்ணங்களின் ஆதிக்கம் உங்களை ஆட்கொள்ளலாம். மேலும், இந்த காலகட்டத்தில் உங்களது செலவுகளின் பட்டியல் அதிகரிக்கும். எனவே, பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எதையும் இந்த நேரத்தில் எடுப்பதைத் தவிர்க்கவும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த சூரிய கிரகணத்தின் போது தங்களது கௌரவம் மற்றும் மரியாதையை இழக்க நேரிடும். மேலும், இந்த காலக்கட்டத்தில் பிறருடன் பேசும் போது உங்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறத. வீண் சர்ச்சைகளில் இருந்து விலகி இருப்பது நன்மை தரும். எதிரிகளால் உங்கள் தொழிலுக்கு சேதம் ஏற்படலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். கையில் இருந்த சேமிப்பு தொகை கரைய தொடங்கலாம். எனவே, செய்யும் காரியம் அனைத்திலும் நிதானத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

சூரிய கிரகணத்தின் தீய விளைவுகளைத் தவிர்க்கும் வழிகள்

சூரிய கிரகணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய இந்த மூன்று ராசிக்காரர்களும், கிரகணத்தின் போது காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் மோசமான பலன்களைத் தவிர்க்க முடியும். மேலும், அவர்களின் இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போது உங்கள் சிந்தனையை எப்போதும் நேர்மறையாக வைத்து செயல்பட வேண்டும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →