Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
பயணம்

இந்தியாவில் உள்ள 5 அழகான மலைப்பிரதேசங்கள்...

இந்தியாவில் உள்ள 5 அழகான மலைப்பிரதேசங்கள்...

இந்தியாவில் பல மலைப்பிரதேசங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. இவை அனைத்துமே அமைதியான மற்றும் வசீகரிக்கும் இடமாக இருக்கின்றன. அந்த பட்டியலில் காஷ்மீரும் இடம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் மிக அழகான மலைப்பிரதேசங்களில் ஒன்றாகும். குல்மார்க், ஸ்ரீநகர் மற்றும் லே லடாக் ஆகியவை இதில் அடங்கும். இது தவிர, ஹிமாச்சலப் பிரதேசத்திலும், சிம்லா, மணாலி மற்றும் டல்ஹவுசியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளை சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். முசோரி மற்றும் நைனிடால் வட இந்தியாவில் மிகவும் பிரபலமான மலைப்பிரதேசங்களில் ஒன்றாகும். அதே நேரத்தில், கூர்க், ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகியவை தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மலைப்பிரதேசங்கள். அந்த அடிப்படையில், இந்தியாவில் இருக்கக்கூடிய டாப் 5 ஹில் ஸ்டேஷன் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

நைனிடால் (Nainital)

உத்தரகாண்ட் மாநிலத்தின் மிக அழகான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நைனிடால், குமாவோன் மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இது 'நைனி ஏரி' எனப்படும் தனித்துவமான மலைப்பிரதேசம். இது இயற்கை அழகு நிறைந்தது. நைனிடால் பனி மூடிய மலைகள் மற்றும் அமைதியான ஏரிகளுடன் வசீரகமான காட்சிகளைக் கொண்டுள்ளது.

முசோரி (Mussoorie)

இந்த இடமானது தெற்கில் டூன் பள்ளத்தாக்கு மற்றும் வடக்கே இமயமலை வரையிலான காட்சிகளைக் காட்டக்கூடியது. டேராடூனில் இருந்து சுமார் 34 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மலைப்பிரதேசம் சுற்றுலாவுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு வசீகரமான நகரம் உள்ளது. அங்கு செல்வதன் மூலம் மால் சாலையில் நடந்து செல்லலாம், கன் ஹில் வரை கேபிள் கார்களில் சவாரி செய்யலாம் அல்லது அத்தகைய அழகான நகரத்தைப் பார்ப்பது ஒன்று அவ்வளவு அருமையாக இருக்கும்.

குல்மார்க் (Gulmarg)

குல்மார்க், இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் சுற்றுலாப்பயணிகளால் மிகவும் விரும்பப்படும் பனிச்சறுக்கு இடமாகும். ஸ்ரீநகரில் இருந்து 52 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பயணம் செய்யும் போது, ​​யூசுப் ஷா சக் மற்றும் ஜஹாங்கீர் போன்ற மன்னர்களின் இல்லங்களைக் காணலாம். இங்கிருந்து பார்த்தால், உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும். எனவே, வாழ்வில் நிச்சயம் ஒரு முறையேனும் இந்த இடத்திற்கு சென்று வர வேண்டும்.

லே லடாக் (Leh Ladakh)

சுற்றுலாப்பயணிகளுடன் சேர்ந்து, லடாக்கில் பல மலையேற்றங்கள் மற்றும் பிற சாகச நடவடிக்கைகளில் ஈடுபட கிராண்ட் லே வாய்ப்பளிக்கிறது என்றே கூறலாம். சாகச பயணங்களை காட்டிலும் அங்கே வாடகை பைக், ஆடம்பரமான ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் ஆகியவை உள்ளன. இது உங்கள் பயணத்தையும், அங்கு தங்குவதையும் மிகவும் எளிதாக்குகிறது. மேலும் இந்தியாவின் மிக உயரமான விமான நிலையத்தின் வழியாக அதை சென்று அடைவது உங்களை மேலும் உற்சாகப்படுத்தக்கூடும்.

டார்ஜிலிங் (Darjeeling)

டார்ஜிலிங்கின் இயற்கை அழகு சுற்றுலா பயணிகளை கவருவதோடு, அவர்களை சிறைப்படுத்தியும் விடுகிறது. அதனாலேயே டார்ஜிலிங்கிற்கு ஒரு முறை சென்றவர்கள் மீண்டும் மீண்டும் செல்ல ஆசைப்படுகிறார்கள். இந்த மலைப்பகுதியில் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவற்றின் ஒவ்வொரு நிழலிலும் பூந்தோட்டங்களும் மற்றும் தேயிலை தோட்டங்களுடன் சுற்றுலாப்பயணிகளை பூத்துக்குலுங்கி வரவேற்கின்றன. இங்குள்ள தேநீர் உலகின் மிகவும் பிரபலமான தேநீர்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

இந்தியாவில் பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகச்சிறந்த சுற்றுலாத் தலங்கள்: குறைந்த செலவில் ஒரு சொர்க்கப் பயணம்! வாசிக்க →