Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

சனியின் அஸ்தமனம் இந்த 4 ராசிய பாடாப்படுத்த போகுது... இதுல உங்க ராசியும் இருக்கா?

சனியின் அஸ்தமனம் இந்த 4 ராசிய பாடாப்படுத்த போகுது... இதுல உங்க ராசியும் இருக்கா?

ஒரு ராசியில் இருந்து மற்றோரு ராசிக்கு செல்வதற்கு முன்பு சனி பகவான் 33 நாட்கள் மறைந்து இருப்பார். அதற்கு சனி அஸ்தமனம் என்று பெயர். அப்படி, ஏப்ரல் 29ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் இடம் பெயர போகிறார். கும்ப ராசியில் இவர் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். அதற்கு முன்னதாக ஜனவரி 22ஆம் தேதி முதல் சனி பகவான் மறைந்து இருப்பார். பின்னர், பிப்ரவரி 22ஆம் தேதி சனி பகவானின் உதயமானது நிகழும். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில், சனி பகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்குமே சில சுப அல்லது அசுப பலன்களை கொடுக்கும். அப்படி சிரமங்களை சந்திக்க போகும் ராசிகளைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் ராசியும் அதில் உள்ளதாக என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்…

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நாளை முதல் அடுத்த 33 நாட்களுக்கு சற்று வேதனை நிறைந்த காலமாகவே இருக்கக்கூடும். சனியின் அஸ்தமனம் உங்களது வேலையில் தொடர் தோல்விகளையும், அதனால் மன உளைச்சலையும் ஏற்படுத்தக்கூடும். அதுமட்டுமின்றி, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, எதற்கும் தயாராக இருப்பதோடு, சற்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். செலவுகள் கையை மீறி போகலாம். இதனால், உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளும் சாத்தியமாகும். இது தவிர, உங்களது வேலைக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இந்த காலக்கட்டத்தில் நிதி இழப்பும் ஏற்படலாம்.

கடகம்

சனி அஸ்தமனம் நிகழும் இந்த 33 நாட்களும் கடக ராசிக்காரர்களுக்கு நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மன உளைச்சல் நிறைந்திருக்கும். அதுமட்டுமின்றி, அலுவலகத்தில் தேவையற்ற வாக்குவாதங்களும் நிகழலாம். உங்களது கோபத்தாலும், கடுமையான வார்த்தைகளாலும் உங்களது வேலையில் கடுமையான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும். மேலும், வியாபாரிகளுக்கு இந்த காலக்கட்டத்தில் அலட்சியத்தின் காரணமாக பணத்தை இழக்கும் அபாயமும் உள்ளது. எனவே, அடுத்து வரும் 33 நாட்களும் அலட்சத்தை விடுத்து சற்று கவனத்தோடு அனைத்து வேலைகளையும் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

சனியின் அஸ்தமனத்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு அடுத்து 33 நாட்களும் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கும். இதனால், எந்தவொரு வேலையில் மனம் நாட்டம் காட்டாது. அலுவலகத்தில் முக்கிய வேலைகள் சிலவற்றை முடிக்காததால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். இத்தனை நாட்கள் கடினமாக உழைத்து வந்த உங்களுக்கு அதற்கான பலன் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமின்றி, உங்களது வேலைக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே, அடுத்த 33 நாட்கள் உங்கள் அலுவலக வேலைகளில் மிகுந்த கவனம் செலுத்து, மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிக்க அறிவுறுத்தப்படுகிறது.

துலாம்

சனி பகவானின் அஸ்தமனத்தால் மோசமான விளைவுகளை பெறக்கூடிய ராசி துலாம் ராசி தான். அலுவலகம் அல்லது வெளி இடங்களில் தேவையில்லாத வாக்குவாதங்கள் உருவாகலாம். இதனால், உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, சட்ட ரீதியான சிக்கல்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு, அலவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற திடீர் கருத்து வேறுபாடு உருவாகலாம். இதனால், வேலைக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே, அடுத்த 33 நாட்களுக்கு உங்களுக்கு நாவடக்கம் தேவை.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →