Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

மீனத்தில் இருக்கும் சுக்கிரனால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு குறிப்பிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை...

மீனத்தில் இருக்கும் சுக்கிரனால் இந்த 5 ராசிக்காரர்களுக்கு குறிப்பிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை...

சுக்கிர பகவான் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று மீன ராசியில் சஞ்சரித்தார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை உண்டு பண்ண கூடும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, பல ராசிக்காரர்கள் சுக்கிரனின் சஞ்சாரத்தின் போது பல நல்ல சாதகமான செய்திகளையே பெறுவார்கள். அதே நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு மட்டும் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. சுக்கிரன் ராசி மாறியுள்ள இந்த காலத்தில் எந்த 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்…

மேஷம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால், நீங்கள் வாழ்க்கையில் நிதிச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றமும், வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். இந்த பெயர்ச்சி காலத்தில் கலவையான முடிவுகளைப் பெறுவீர்கள்.

சிம்மம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டில் நுழைந்துள்ளார். பெயர்ச்சி காலத்தில் அலுவலகத்தில் பல சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற சச்சரவுகளில் இருந்து விலகி இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகள் இந்த காலக்கட்டத்தில் எந்தவிதமான ஆபத்தான முடிவு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

துலாம்
சுக்கிரன் துலாம் ராசிக்கு 6ஆம் வீட்டில் நுழைந்துள்ளார். பெயர்ச்சி காலத்தில் துலாம் ராசிக்காரர்கள் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்கள் வீண் சச்சரவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி பேசினால், குடும்பத்தில் சண்டை சச்சரவுகளையும், வீண் வாக்குவாதங்களையும் தவிர்க்கவும். இதனால், உறவுகளுக்குள் பிளவு ஏற்படக்கூடும். அதுமட்டுமின்றி, நிதி பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க செலவுகளைக் கட்டுப்படுத்தவும். ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.

விருச்சிகம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். தொழில், கல்வி மற்றும் வேலையில் முன்னேற்றம் இருக்கலாம். ஆனால் அதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. ஊதிய உயர்வுக்கான வாய்ப்புகளும் உண்டாகும். மாணவர்கள் இந்த காலத்தில் எதிர்கொள்ளும் தேர்வுகளில் வெற்றி பெறலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். முதலீடு செய்வதற்கு இதுவே நல்ல நேரம். மொத்தத்தில், பெயர்ச்சி காலத்தில் எதிர்பார்த்த அளவு கிடைக்கா விட்டாலும், ஓரளவிற்கு மிதமான முடிவுகளைப் பெறுவீர்கள்.

மகரம்
சுக்கிரன் மூன்றாம் வீட்டில் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். பெயர்ச்சி காலத்தில் உடன்பிறப்புகளின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு இருக்கும். உத்தியோகத்தில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தொழிலில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இருப்பினும், இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் மட்டும் சிறிதும் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →