Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

குரு பகவானின் அருளை இந்த ஆண்டு முழுவதும் பெறப்போகும் ராசிக்காரர்கள்...

குரு பகவானின் அருளை இந்த ஆண்டு முழுவதும் பெறப்போகும் ராசிக்காரர்கள்...

ஆண்டிற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றி கொள்ளும் குரு பவகான் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி குரு பகவான் தனக்குப் பிடித்தமான ராசியான மீன ராசியில் சஞ்சரித்துள்ளார். ஜோதிடத்தில் இத்தகைய நிகழ்வு மிகவும் அரிதானது மற்றும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகுதான் இது நடக்குமாம். அதிலும், இந்த மாதத்தில் சந்திரனில் இருந்து செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனி, சூரியன், ராகு, கேது ஆகிய கிரகங்கள் பிற ராசிகளில் சஞ்சரிக்கும். ஜோதிடத்தின்படி, அனைத்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இருப்பிடத்தின் கால மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கிரக மாற்றங்களின் பலன் என்பது ஒவ்வொரு ராசிகளுக்கும் வித்தியாசமாக இருக்கும். சில ராசிகளுக்கு சுப பலன்களாகவும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களாகவும் இருக்கும். தேவகுரு பிருஹஸ்பதியானவர் அறிவு, கல்வி, குழந்தைகள், திருமண வாழ்க்கைத், சேவை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்கான கடவுகளாக கருதப்படுகிறார். ஜாதகத்தில் குரு பகவானின் நிலை வலுவாக இருப்பவர்களது வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியையும் நிச்சயம் பெறுவார்கள். அப்படி இந்த ஆண்டு மீனத்திற்கு பெயர்ச்சியான குரு பகவானின் அருளால் இந்த வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் இருக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

மேஷம்

மீனத்தில் சஞ்சரிக்கும் குருவால் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு அல்லது மரியாதை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த குரு பெயர்ச்சி உங்கள் நிதி நிலைக்கு ஏற்றத்தைக் கொடுத்திடும். மேலும் இது பெரிய அளவில் பாதிப்பையும் ஏற்படுத்தாது. எந்தவொரு சட்ட ரீதியான நீதிமன்ற வழக்கிலும் நீங்கள் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சொத்து அல்லது நிலத்தின் மூலம் ஆதாயங்களும் உங்களுக்கு சாத்தியமாகும். குரு உங்கள் ராசியில் 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் திடீர் பயணங்கள் செய்ய வாய்ப்புள்ளது. உங்கள் தொழிலில் அதிக லாபம் காண்பீர்கள்.

ரிஷபம்

நிதி ரீதியாக, ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். அவர்கள் நல்ல நிதி பலன்களை அடைவார்கள் மற்றும் ஒட்டுமொத்த லாபத்தின் தொகையும் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் உங்களுக்கு திடீர் தொழில் வாய்ப்பும் அல்லது பண வரவும் வரலாம். இதனால் உங்கள் சேமிப்பு கணிசமாக அதிகரிக்கலாம். இருப்பினும், இந்த காலக்கட்டத்தில் நீங்கள் பிறரது பேச்சைக் கேட்டு கண்மூடி தனமாக எந்தவொரு முதலீட்டையும் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக, வணிகர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரும். மீனத்தில் சஞ்சாரித்த குரு, உங்கள் ராசியில் 4, 2 மற்றும் 6 ஆம் வீட்டைப் பார்ப்பார். இது மிதுன ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் நன்மை பயக்கும். உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உங்களது எதிரிகள் அனைவரும் இந்த நேரத்தில் பலவீனமடைவீர்கள். நீண்ட நாட்களாக அவதியுற்று வந்த கடன் தொல்லையிலிருந்தும் நீங்கள் விடுபடுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கவும் வாய்ப்புள்ள்து. நீங்கள் பெரியவர்களின் ஆலோசனையைப் பெற்று நடந்து கொண்டால், உங்களுக்கு தொழில் ரீதியான விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.

கடகம்

குரு சஞ்சாரம் உங்கள் ராசிக்கு சாதகமாக மாற்றங்களை ஏற்படுத்த போகிறது. இது உங்கள் தொழிலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அலுவலகத்தில் நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக மாறும். உங்கள் முயற்சிகளை அலுவலகத்தில், உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் என அனைவரும் பாராட்டுவார்கள். இந்த ஆண்டு நீங்கள் சிறந்ததொரு முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் நிச்சயம் நல்ல செய்திகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு, இந்த ஆண்டு மிகவும் லாபகரமாக இருக்கும்.

சிம்மம்

குரு பகவான் சிம்ம ராசியில் எட்டாவது வீட்டில் சஞ்சரிப்பது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். வரும் மாதங்களில் நீங்கள் நிறைய நிதி வளர்ச்சியைக் காண்பீர்கள். இருப்பினும், உங்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கலாம். சில மூன்றாம் நபரால், உங்களிடையே பெரிய தகராறுகளும் ஏற்படலாம். யோசிக்காமல் முடிவெடுத்து நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம் என்பதால், இனி வரும் காலங்களில் நீங்கள் உங்கள் துணையுடன் பேசும்போது அமைதியாகவும் பொறுமையாவும் இருக்க முயற்சி செய்யுங்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →