Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆன்மீகம்

மே 22 வரை இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்...

மே 22 வரை இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்...

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். ஜாதகம் என்பது கிரகங்களின் இயக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்கள் மே 22ம் தேதி வரை கவனமாக இருக்க வேண்டும். இந்த குறிப்பிட்ட காலத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்…

ரிஷபம்

இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு பொறுமை தன்மை குறையலாம். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். மேலும், உங்கள் மீதான குடும்பப் பொறுப்புகள் கூடும். ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றிற்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும். குழந்தைக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். எனவே, கவனமாக இருக்க வேண்டும். மேலும், உங்கள் மனதில் அதிருப்தி ஏற்படக்கூடும். திட்டமிடாத செலவுகளும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் கடன் வாங்குவதையும், பிறருக்கு கடன் கொடுப்பதையும் தவிர்த்திடுவது நல்லது.

கன்னி

இந்த காலக்கட்டத்தில் கன்னி ராசிக்காரர்களின் சுபாவத்தில் இயற்கையாக எரிச்சல் தன்மை அதிகரித்து காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் கடினமாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். தொடர்ந்து கடினமாக உழைத்தால் அதன் பலனை விரைவில் பெற்றிடலாம். உங்கள் மீதான குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். உத்தியோகஸ்தர்கள் இந்த நேரத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் உடற்சோர்வு உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கலாம். எனவே, ஓய்வில் கவனம செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் மன நிம்மதி ஏற்படும். உங்கள் இயல்பை மாற்றி, அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில புதிய பணிகளின் பொறுப்பை நீங்கள் பெறலாம். அலுவலகத்தில் கடின உழைக்க வேண்டும். அப்போது தான் எதிர்கால கனவு நனவாகும். இந்த நேரத்தில் குழந்தைகள் மீதான அக்கறை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களால் கஷ்டப்பட நேரிடும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டத்தில் மனதில் விரக்தி உணர்வுகள் எழலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும், அலுவலகத்தில் பணியிட மாற்றமும் சாத்தியமாகும். இந்த நேரத்தில் உங்களுக்கு ஆடை, ஆபரணங்களின் மீது அதிக ஆர்வம் உண்டாகும். அதற்காக நிறைய செலவும் செய்யலாம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. வேலையில் கடின உழைப்பு அதிகமாக இருக்கும்.

கும்பம்

இந்த காலக்கட்டத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு மன அமைதி இருந்தாலும், அதிருப்தியும் உடன் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் எதிரிகள் உங்களை வெற்றி பெறுவார்கள். உடன்பிறந்தோருடன் உங்களுக்கு கருத்துவேறுபாடு ஏற்படலாம். பேச்சுவார்த்தையின் போது நீங்கள் பொறுமையாக இருங்கள். உங்கள் பேச்சில் இயல்பாகவே கடுமை தன்மை இருக்கும். அதை இந்த நேரத்தில் கட்டுப்படுத்தி கொள்ள முயலவும். மேலும், இந்த நேரத்தில் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பிரார்த்தனையின் சக்தி: தினசரி வழிபாடு வாழ்க்கையை மாற்றியமைப்பது எப்படி? வாசிக்க →