Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

ஹோலி கொண்டாடும் முன்பு கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...

ஹோலி கொண்டாடும் முன்பு கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...

ஹோலி பண்டிகை வரப்போகிறது. அதற்கு முன்னதாகவே மக்கள் அதற்கான கொண்டாட்ட திட்டங்கள் தீட்ட தொடங்கிவிட்டனர். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆரோக்கியத்தையும் சருமத்தையும் கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானது தானே. ஏனென்றால், ஹோலி கொண்டாட்டத்தின் போது பயன்படுத்தப்படும் வண்ண பொடிகளில் ரசாயம் கலந்திருந்தால் அவை உங்களது சருமம், கூந்தல் என அனைத்திற்கு கேடு விளைவிக்கக்கூடும். இதன் காரணமாக, ஹோலி கொண்டாட்டத்தின் போது அவசியமான சரும பராமரிப்பு குறிப்புகளை நீங்கள பின்பற்றியே ஆக வேண்டும். அப்போது தான் உங்கள் சருமத்தை ரசாயனங்களில் பாதிப்பில் இருந்து காத்திட முடியும். எனவே, நீங்கள் ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய சில அத்தியாவசியமான குறிப்புகளைத் தான் இந்த கட்டுரையில் சொல்லி இருக்கிறோம்.

ஹோலி விளையாடும் முன், கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய குறிப்புகள்:

சரும பாதுகாப்பு

நீங்கள் ஹோலி பண்டிகையின் போது வண்ண வண்ண பொடிகளை தூவி விளையாடுவதற்கு முன்பு, முதலில் உங்கள் உடல் மற்றும் முக சருமத்தில் எண்ணெய், கிரீம் அல்லது நெய் தடவி கொள்ளவும். இப்படி செய்வதால், வண்ண வண்ண பொடிகளில் இருக்கும் நிறமோ, ரசாயனங்களோ சருமத்தை பாதிக்காமல் தடுத்திடலாம். இது தவிர, உதடுகளில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி கொள்வது சிறந்தது. இது உதடுகளில் எந்த நிறத்தையும் படிய விடாது.

கூந்தல் பாதுகாப்பு

ஹோலி பண்டிகையின் போது பயன்படுத்தப்படும் நிறங்கள் கூந்தலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தலைமுடியை ஃப்ரீ ஹேர் விட்டு கொண்டு விளையாட வேண்டாம். இவ்வாறு செய்வதால் உங்கள் தலை சருமத்தில் வண்ண பொடிகள் படிந்து அவை தலையின் சருமத்தை அதிகம் பாதிக்க செய்திடும். எனவே, இது நேராமல் இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், ஹோலி விளையாடுவதற்கு முன்பு, உங்கள் தலைமுடியை ஸ்கார்ஃப் அல்லது தொப்பியை வைத்து கொள்ளலாம். முன்னதாக தலை முடிக்கு எண்ணெய் தேய்த்து கொள்ள மறவாதீர்கள். அப்போது தான் கூந்தலில் தெரியாமல் வண்ணங்கள் பட்டாமல் அவை சுலபமாக அகற்றிட முடியும்.

கண்களின் பாதுகாப்பு

ஹோலி விளையாடும் போது கண்களை மிக மிக கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், கண்களுக்குள் வண்ணப்பொடிகள் சென்றால், அவை பெரும் தொற்றை ஏற்படுத்தலாம். அப்படி கண்களில் வண்ணப்பொடிகள் தெரியாமல் பட்டாலும் உடனடியாக கண்களை சுத்தமான மற்றும் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். குறிப்பாக, கண்களைச் சுற்றி பச்சை நிறம் மற்றும் சில்வர் நிற பொடிகளை ஒருபோதும் பூசவே கூடாது.

ஹோலிக்கு பின் செய்ய வேண்டியவை

ஹோலி கொண்டாட்டதிற்கு பின் உங்கள் முகத்திலோ அல்லது உடலிலோ ஒட்டிய வண்ணங்கள் எவ்வளவு கழுவியும் போகவில்லை என்றால், வீட்டிலேயே ஒரு உப்தான் கலவையை செய்து பயன்படுத்துவது சிறந்தது. அதற்கு, கடலை மாவு, பால், மஞ்சள் மற்றும் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் ஆக பயன்படுத்தலாம். அதற்கு முதலில் உங்கள் சருமத்தை எலுமிச்சையை தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும். பின்னர், தயாரித்த பேஸ்டை கொண்டு முகத்தில் தடவி கழுவினால், எப்படிப்பட்ட வண்ணமும் சுலபமாக நீங்கிடும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →