Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

கோடையில் உதட்டு வறட்சியைத் தடுக்க வீட்டிலேயே இந்த லிப் பாம் செய்து முயற்சிக்கலாமே...

கோடையில் உதட்டு வறட்சியைத் தடுக்க வீட்டிலேயே இந்த லிப் பாம் செய்து முயற்சிக்கலாமே...

கோடை காலம் வந்தாலே உடலில் பல மாற்றங்கள் ஏற்பட ஆரத்து விடும். இந்த பட்டியலில் உதடுகளில் வறட்சி மற்றும் விரிசல் ஏற்படக்கூடும். சொல்லப்போனால், குளிர்காலத்தில் உதடு வெடிப்பு பிரச்சனை பொதுவானது. ஆனால், பலரின் உதடுகள் கோடை கால வெப்பத்தில் கூட வெடிக்க ஆரம்பிக்கும். உண்மையில், கோடைக்காலத்தில் உடலுக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக உதடுகள் உலர்ந்து வெடிக்கத் தொடங்குகின்றன. அதுமட்டுமின்றி, அதிக நேரம் வெயிலில் இருப்பது, வறண்ட காற்றின் வெளிப்பாடு மற்றும் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவையும் அடிக்கடி இதற்கு வழிவகுக்கிறது. அதே நேரத்தில், பலர் தங்கள் வறண்ட உதடுகளை நாக்கால் மீண்டும் மீண்டும் ஈரப்படுத்துவது போன்ற செயலில் ஈடுபடுவர். இது இந்த சிக்கலை இன்னும் அதிகரிக்க செய்யும். இருப்பினும், உங்கள் உதடுகள் வெடிக்காமல், அழகாக இருக்கும் வகையில், வீட்டிலேயே லிப் பாம் தயாரித்து பயன்படுத்தலாம். இந்த கட்டுரையில், வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கக்கூடிய லிப் பாம் பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்…

தேன் லிப் பாம்

தேனினால் செய்யப்பட்ட லிப்பாம் இயற்கையாகவே உங்கள் உதடுகளை ஈரப்பதமாக்க உதவிடும். இதைத் தயாரிக்க, கிளிசரின் அல்லது வாஸ்லினில் சில துளிகள் தேன் கலந்து, தினமும் இரவில் தூங்கும் போது உதடுகளில் தடவவும்.

தேங்காய் லிப் பாம்

பெட்ரோலியம் ஜெல்லி மற்றும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது சிறந்த லிப் பாம் ஆக இருக்கும். இந்த இரண்டு பொருட்களையும் சம அளவில் எடுத்து கலந்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து, உங்கள் லிப் பாம் தயாராகிவிடும். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். அதன் பிறகு, தினமும் இரவில் தூங்கும் முன்பு இதைத் தடவவும்.

ஷியா பட்டர் லிப் பாம்

ஷியா பட்டர் உதடுகளை ஈரப்பதமாக்க வைத்திருப்பதில் பெரிதும் உதவிடும். இதற்கு 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய், 1 டீஸ்பூன் ஷியா பட்டர் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து சூடேற்றவும். அது நன்கு உருகியதும், சிறிது பீட்ரூட் மற்றும் கிரேப் ஃப்ரூட் எசன்சியல் ஆயில் ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு இதை உதட்டில் தடவி வரவும்.

சாக்லேட் லிப் பாம்

சாக்லேட் உங்கள் உதடுகளை மென்மையாக்கவும் மற்றும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவிடும். அதற்கு, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் எடுத்து, அதில் 1 டீஸ்பூன் ஜோஜோபா ஆயில் மற்றும் சில துளிகள் டீ ட்ரீ ஆயில் சேர்த்து அத்துடன் ஒரு டீஸ்பூன் கோகோ பவுடரையும் சேர்த்து கலக்கவும். இவை அனைத்தையும் கலந்து காற்று புகாத டப்பாவில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். ஒவ்வொரு நாளும் இரவு தூங்குவதற்கு முன்பு இதை உதட்டில் தடவி வந்தால் உதடு இயற்கையான அழகைப் பெற்றிடும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →