Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

உங்க ஸ்கின் ரொம்ப வறண்டு அசிங்கமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க...

உங்க ஸ்கின் ரொம்ப வறண்டு அசிங்கமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க...

நம் அனைவருக்கும் ஒவ்வொரு விதமாக சரும அமைப்பு இருக்கும். சாதாரண சருமம், எண்ணெய் பசை, வறண்ட சருமம் என்று ஒவ்வொரு வகை இருக்கும். இவற்றில் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு எப்போதுமே சருமம் வறண்டு, வெள்ளை திட்டுகளுடன் காணப்படும். அதிலும், இந்த குளிர்காலத்தில் சொல்லவே வேண்டாம். பிரச்சனை இரட்டிப்பாகிவிடும். அதனால், இந்த குளிர்காலத்தில் வறண்ட சருமம் உள்ளவர்கள் தங்களது சருமத்தை அதிகப்படியான வறட்சியில் இருந்து எப்படி காத்துக்கொள்வது, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

சிலர் சரும வறட்சியை போக்க பல க்ரீம்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவர். ஆனால், நம் வீட்டு சமையலையில் உள்ள பொருட்களை பயன்படுத்தியே சரும வறட்சியை போக்கி முடியும். அதை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்…

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்

தேங்காய் எண்ணெயயும், தேனையும் சம அளவுள எடுத்து ஒன்னா சேத்து நல்ல மிக்ஸ் பண்ணிக்கனும். இந்த மிக்ஸர முகம் மற்றும் வறட்சி அதிகமாக இருக்கும் உடல் பாகங்களிலும் கை, கால் அந்த மாதிரி இடத்துலயும் தடவிக்கலாம். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும். இதனால் சரும வறட்சியை கட்டுப்படுத்த முடியும். தேங்காய் எண்ணையிலும், தேனிலும் சருமத்திற்கு ஈரப்பதமளிக்கும் பண்பு அதிகமாவே இருப்பதால் நாம் அதை தாராளமா உபயோகிக்கலாம்.

வாழைப்பழம் மற்றும் தேன்

சரும தொற்றுகள், அழற்சி போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இந்த வழியைப் பயன்படுத்துறது மூலமா அந்த பிரச்சனைகளை தடுக்கலாம். அதற்கு நன்கு பழுத்த வாழைப்பழத்தை மசித்து, அது கூட கொஞ்சம் தேன் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணனும். அதை முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து, அப்புறம் குளிர்ந்த நீரால் கழுவிடனும். வாழைப்பழத்துல அதிக அளவுல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இருப்பதால் அது சருமத்துக்கு புது பொலிவை கொடுத்து, வறண்டு போகாம பார்த்துக்கொள்ளும்.

அவகேடோ ஆயில்

அவகேடோ பழம் சருமம் மற்றும் தலைமுடிக்கு அற்புதமான நன்மைகளை வழங்கக்கூடிய பழம். இதில் அழகை மேம்படுத்த தேவையான சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இதன் தனி சிறப்பு என்னவென்றால், இதை எந்த ஒரு பொருளுடனும் சேர்த்து பயன்படுத்த வேண்டுமென்ற அவசியமே இல்லை. இதை தனியா அப்படியே பயன்படுத்தலாம். குறிப்பாக ட்ரை ஸ்கின் பிரச்சனை இருப்பவர்கள் சரும வறட்சியை போக்க இதை அதிகமாக பயன்படுத்தலாம். அதற்கு அவகேடோ பழத்தை அப்படியே சருமத்தில் தடவலாம் இல்லையென்றால், அவகேடோ எண்ணெயை கூட சருமத்தில் தடவலாம்.

பப்பாளி டோனர்

பப்பாளி பழத்தில ஈரப்பதமூட்டும் பண்புகள் மற்றும் சரும பொலிவுக்கு தேவையான காரணிகளும் அதிகமாக இருக்கு. அதுமட்டுமில்லாமல் இது முகப்பரு தழும்புகளை கூட இருந்த இடம் தெரியாமல் மறைய செய்திடும். அதற்கு நீங்க செய்ய வேண்டியது எல்லாம், பப்பாளியை சிறு சிறு துண்டாக வெட்டி பிளெண்டரில் போட்டு ஒரு கப் நீரை ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த பப்பாளி பேஸ்டை ஒரு காட்டன்பாலில் நனைச்சு முகத்தைத் துடைத்து எடுக்கவும். இப்படி ஒரு முறை தயாரித்த டோனரை 5 நாட்கள் வரைக்கும் வைத்து பயன்படுத்தலாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →