Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும் புரோடீன் ஹேர் மாஸ்க்கை இனி வீட்டிலேயே செய்யலாம்...

கூந்தல் வளர்ச்சியைத் தூண்டும் புரோடீன் ஹேர் மாஸ்க்கை இனி வீட்டிலேயே செய்யலாம்...

இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு அழகு பராமரிப்பு என்பது இன்றியமையாததாக மாறிவிட்டது. மாசுபட்ட சுற்றுசூழலில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பது எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல் கூந்தல் பராமரிப்பு முக்கியமான ஒன்று. ரசாயன கலவைகள் நிறைந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதன் விளைவாக கூந்தல் நிறம் மாறி, வளர்ச்சி குறைந்து, முடி வெடிப்பு, உதிர்வு என அனைத்து விதமான பிரச்சனைகளையும் இன்றைய தலைமுறையினர் சந்திக்க நேரிடுகிறது. இவை அனைத்திற்கம் ஒரே ஒரு தீர்வு என்றால், அது வீட்டு வைத்தியங்கள்.

புரோட்டீன் ஹேர் மாஸ்க் என்பது கூந்தலின் வறட்சியை நீக்கி, இயற்கை நிறத்தை மீட்டு கொடுக்கும். இப்போது வீட்டிலேயே புரோடீன் ஹேர் மாஸ்க் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள போகிறோம். வாரத்திற்கு ஒரு முறை இதை செய்து வருவதன் மூலமாக அனைத்து விதமான கூந்தல் பிரச்சனைகளில் இருந்தும் நீங்கள் விடுபட முடியும்.

கசப்பான பாகற்காயில் இத்தனை நன்மைகள் இருக்குனு உங்களுக்கு தெரியுமா…

புரோடீன் ஹேர் மாஸ்க்

புரோடின் ஹேர் மாஸ்க் உங்கள் தலைமுடிக்கு உயிர் கொடுக்கக்கூடியது. மாறிவரும் நாகரீகத்தின் காரணமாக, பல பெண்கள் தங்கள் தலைமுடியில் புதுவித ரசாயன பொருட்களைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். வித்தியாசமான ஹேர் ஸ்டைல், ஹேர் கலர் என தங்கள் தோற்றத்தை ஒவ்வொரு நாளைக்கு மாற்றி கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஹேர் கலர் செய்வதில் உள்ள ஒரு மோசமான விஷயம் என்னவென்றால், அது ஆரம்பத்தில் மிகவும் நன்றாகத் தெரிந்தாலும், பின்னர் அது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். முதலில் ஹேர் கலரிங் உங்கள் முடியை மிகவும் சேதப்படுத்தும். இயற்கையாகவே, முடியில் ஒரு சிறப்பு வகை புரதம் உள்ளது. பல்வேறு ரசாயங்களால் முடியில் இருந்து புரதம் நீங்கிடுவதால், முடி பலவீனமாகவும் நிறமற்றதாகவும் மாறக்கூடும். மூலம், பல அழகு சாதன நிலையங்களில் பல்வேறு விதமான புரோடீன் சிகிச்சைகள் உள்ளன. ஆனால் அவை மிகவும் விலை உயர்ந்தவை.

இந்த சரும பிரச்சனைகள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்…உஷார்!!!

எனவே, குறைந்த செலவில் வீட்டிலேயே கூந்தலுக்கு வலு சேர்க்கும் புரோட்டீன் ஹேர் மாஸ்க் செய்வது எப்படி என்று இப்போது பார்க்க போகிறோம். இது உங்கள் தலைமுடிக்கு உயிர் கொடுத்து, முடி இரண்டு மடங்கு வேகமாக வளர உதவிடும்.

புரோட்டீன் ஹேர் மாஸ்க்கிற்கு தேவையான பொருட்கள்:

  • ஆளிவிதை – 2 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • ஃபுள் கிரீம் மில்க் - 1 கப்
  • முட்டையின் மஞ்சள் கரு - 1

புரோட்டீன் ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?

  • முதலில், ஆளிவிதையை நீர் ஊற்றி 10 முதல் 15 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து வடிகட்டி அதன் ஜெல்லை எடுத்து கொள்ளவும்.
  • பின்னர், ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் பிரித்து எடுத்து கொள்ளவும்.
  • அடுத்ததாக, ஆளிவிதை ஜெல் நன்கு ஆறியதும், மீதமுள்ள பொருட்களையும், முட்டை மஞ்சள் கருவையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • தயார் செய்த இந்த புரோட்டீன் ஹேர் மாஸ்க்கை உங்கள் முடியில் தடவி அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வைத்திருந்து பின்னர் கூந்தலை அலசிடவும்.

இரண்டே நாளில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறையனுமா? அப்ப இத செஞ்சு பாருங்க…

என்ன செய்தாலும் உங்கள் தலைமுடியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறதா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

முகத்தில் வழியும் எண்ணெய் பசையைப் போக்க தேனுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க…

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,030
தங்கம் (24k)
1 கிராம்
₹13,682
வெள்ளி
1 கிராம்
₹240

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →