Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

கோடையில் ஏற்படக்கூடிய வயிற்று பிரச்சனைகளைப் போக்க புதினாவை இப்படி சாப்பிடுங்க...

கோடையில் ஏற்படக்கூடிய வயிற்று பிரச்சனைகளைப் போக்க புதினாவை இப்படி சாப்பிடுங்க...

புதினா என்பது புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு மூலிகை வகை. அதிலும், கோடைகாலத்தில் இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. மேலும், அதன் சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக எப்போது வேண்டுமானாலும் புதினாவைப் பயன்படுத்தலாம். இருப்பினும், அதன் குளிர்ச்சியான பண்புகளால், அவை கோடையில் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அனைத்து வகையான உணவுகளிலும் புதினாவை தாராளமாக சேர்த்து கொள்ளலாம். இது உணவின் சுவையைக் கூட்டுவது மட்டுமல்லாமல், உடலுக்கும் நன்மை பயக்கும். சரி, கோடை காலத்தில் புதினா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும், எந்தெந்த வழிகளில் அதை சாப்பிடலாம் என்பதைப் பற்றியும் தான் இந்த கட்டுரையில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்…

வயிற்று சூட்டைக் குறைக்கும்
கோடைகாலத்தில் பலருக்கும் சூடு பிடித்து படாதபாடு படுத்தும். அத்தகைய வயிற்றின் சூட்டைக் குறைக்க புதினாவின் பயன்பாடு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர, வயிறு தொடர்பான பிற பிரச்சனைகளிலிருந்தும் இது விரைவான நிவாரணம் தருகிறது.

உள்ளங்கால் எரிச்சலை குறைக்கும்
நாள் முழுவதும் வெளியில் வெயிலில் அலைந்து திரிபவர்கள் பலரும் உள்ளங்கால்களில் எரிச்சல் உணர்வால் அவதியுறுவார்கள். இதற்கு ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ச்சியான புதினாவை அரைத்து உள்ளங்காலில் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வயிற்று எரிச்சலை தணிக்கும்
புதினாவை மோர், தயிர், மாம்பழச் சாறு ஆகியவற்றைக் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் உணர்வு நீங்கி குளிர்ச்சியைத் தரும். இது தவிர, வெயில், வெப்பமான காற்று மற்றும் உஷ்ணம் ஆகியவற்றிலிருந்தும் உடலை பாதுகாக்கும்.

டான்சில்ஸ் பிரச்சனை
உங்களுக்கு அடிக்கடி டான்சில்ஸ் பிரச்சனை ஏற்படும் என்றால், அதனால் ஏற்படும் வீக்கத்தைப் போக்க புதினாவை தொடர்ந்து பயன்படுத்தலாம். அதற்கு நீரில் புதினா சாற்றை சேர்த்து கலந்து வாய் கொப்பளிக்கவும்.

பல பிரச்சனைகளைத் தடுக்க உதவும்
புதினா சட்னியை கோடையில் தினமும் உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடும். அதற்கு புதினா, மிளகு, பெருங்காயம், கல் உப்பு, உலர் திராட்சை, சீரகம், உலர் பேரீச்சம்பழம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து சட்னியாக அரைத்து உட்கொள்ளவும். இந்த சட்னி வயிற்றில் ஏற்படும் பல நோய்களைத் தடுக்க உதவும்.

இருமலைப் போக்கும்
புதினா மற்றும் இஞ்சி சாற்றில் சிறிது தேன் கலந்து பருகி வர இருமல் பிரச்சனைத் தீரும். இது தவிர, அடிக்கடி விக்கல் தொல்லை இருப்பவர்கள், புதினாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்து மென்று சாப்பிட அந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தோல் நோய்கள் நீங்கும்
புதினா இலைகளைத் தடவினால் பல வகையான தோல் நோய்கள் நீங்கும். காயங்களை ஆற்றுவதற்கும் புதினா சிறந்தது. இது தவிர, கோடையில் புதினாவை அரைத்து முகத்தில் தடவினால், சருமத்தின் சூடு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

மஞ்சள் காமாலையை விரட்டும்
புதினாவை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மஞ்சள் காமாலை போன்ற நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க முடியும். புதினா எந்த வகையில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

சிறுநீரக நோய்களுக்கு சிறந்த மருந்து
புதினாவின் பயன்பாடு சிறுநீர் நோய்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும். புதினா இலைகளை அரைத்து அதனுடன் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் உடலின் உள்ளுறுப்பு சுத்தமாகும். இதனால், உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →