Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

நின்னுக்குட்டே சாப்டுறவங்களா நீங்க? அப்ப இந்த பிரச்சனைலாம் வர வாய்ப்பிருக்கு...

நின்னுக்குட்டே சாப்டுறவங்களா நீங்க? அப்ப இந்த பிரச்சனைலாம் வர வாய்ப்பிருக்கு...

இன்றைய அவசரமான வாழ்க்கை முறையில் எல்லா வேலைகளையுமே அவசரமாக செய்து பழகி விட்டோம். அவற்றில் ஒன்று தான் சாப்பிடுவது. உணவு என்பது நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அப்படிப்பட்ட உணவையே நாம் அவசர அவசரமாக சாப்பிடுகிறோம். அதிலும், பலருக்கு உட்கார்ந்து சாப்பிட கூட நேரம் இருப்பதில்லை. அதனாலேயே தட்டை கையில் ஏந்தியபடி நின்று கொண்டே சாப்பிடுகிறார்கள். அதுதவிர, விஷேச வீடுகளில் கூட இப்போது பஃபே சிஸ்டம் முறையில் உணவுகள் பரிமாறப்படுகின்றன். முன்பெல்லாம், பந்தி போட்டு அமர வைத்து பரிமாறினார்கள். ஆனால், இப்போது உணவை வரிசையாக நின்று வாங்கி நின்றபடியே சாப்பிட்டு விட்டு கிளம்புகிறார்கள்.

இது இன்றைய காலத்தின் பழக்கமாகவே மாறிவிட்டது. நேரமின்மையால், மக்கள் இதுபோன்ற பழக்கங்களை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், நின்று கொண்டே உணவு உண்பதால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அது உடலுக்கு நல்லதா, கெட்டதா என்பதைப் பற்றி எவரும் யோசிப்பதே கிடையாது. தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று கருதப்பட்டாலும், நின்று கொண்டே சாப்பிடுவது ஒரு வகையான ட்ரெண்ட் ஆகிவிட்டது. இந்த முறையால் நேரத்தை வேண்டுமானால் மிச்சப்படுத்தலாம், ஆனால் நிச்சயமாக சில நோய்களுக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம். அதைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்…

உடல் பருமன்

தரையில் சௌகரியமாக அமர்ந்து உணவு உண்ணும் போது நமக்கு ஒரு வித திருப்தி ஏற்படும். அதற்கு காரணம், அப்படி உணவை உட்கொண்டால் தான், உடலானது மூளைக்கு உணவு உட்கொள்ளப்பட்டதாக ஒரு செய்தி செல்வதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதற்கு மாறாக நின்று கொண்டே சாப்பிட்டால் இந்த செய்தி மூளையை சென்றடையாது என கூறப்படுகிறது. இதனால், உணவு உண்ணும் அளவு சீராக இருக்காது. இதன் காரணமாக உடல் எடை அதிகரிக்க கூடும். ஆராய்ச்சி அறிக்கைகளின்படி, நின்றுகொண்டு உணவு உண்பதால் உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதிகப்படியான பசி

நிபுணர்களின் கூற்றுப்படி, நின்று கொண்டே உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் அல்லது இந்த முறையை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்களுக்கு அடிக்கடி பசிக்கும். இவர்கள் எவ்வளவு சாப்பிட்டால் போதும் என்ற மனமே வராது. இதனால், அடிக்கடி பசி ஏற்பட்டு அளவிற்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது உடலில் பல வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, முடிந்தவரை, கீழே அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க முயற்சியுங்கள்.

செரிமானம் பாதிக்கும்

நின்றபடியே உணவு உண்ணும் பழக்கம் செரிமான அமைப்பை அதிக அளவில் பாதிக்கிறது. உட்கார்ந்து சாப்பிடும் போது உணவானது சிறிது சிறிதாக செரிமானமாகி குடலை சென்றடையும். அதுவே நின்று கொண்டு உணவு உண்பதால் உணவு நேரடியாக குடலுக்குள் செல்லும் அபாயம் உள்ளது. இதனால், செரிமான அமைப்பு தொந்தரவு செய்யலாம். எனவே, சீரான செரிமானத்தைப் பெற விரும்பினால் உட்கார்ந்து சாப்பிடும் முறையை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →