Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

தேங்காய் பாலில் டீ போட்டு குடிச்சிருக்கீங்களா? இது உடம்புக்கு ரொம்பவே நல்லதாம்...

தேங்காய் பாலில் டீ போட்டு குடிச்சிருக்கீங்களா? இது உடம்புக்கு ரொம்பவே நல்லதாம்...

நாம் அனைவருமே இன்று வரை பால் டீ, லெமன் டீ, க்ரீன் டீ அல்லது ப்ளாக் டீ என்று விதவிதமாக சாப்பிட்டிருப்போம். ஆனால், தேங்காய் பாலில் செய்த டீ குடித்த அனுபவம் உண்டா? தேங்காய் டீ போடலாம் என்பதே பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், சாதாரண பாலை விட, தேங்காய் பால் டீ உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடியதாம். ஏனெனில் தேங்காய் பால் உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. தேங்காய் பாலில் தேநீர் தயாரித்து குடித்தால், உடல் நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதிலும் கோடை காலத்தில் வெப்பமான சூழலில் இளநீர், தேங்காய் தண்ணீர் குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது. உண்மையில் இது உடலில் எலக்ட்ரோலைட்டை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. இது தவிர, நீரிழப்பு பிரச்சனை ஏற்படவும் அனுமதிக்காது. தேங்காய் பாலில் தயாரிக்கப்படும் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் இந்த டீயை எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்…

தேங்காய் பால் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தேங்காய் டீ என்பது காஃபின் கலந்த ஒரு அற்புத பானமாகும். தேங்காய் பாலை பயன்படுத்தி க்ரீன் டீ அல்லது பிளாக் டீ போன்றவை தயாரித்து அருந்தலாம். தேங்காய்ப் பாலில் அதிக அளவு லாரிக் அமிலம், மெக்னீசியம், இரும்பு, வைட்டமின் சி, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை அடங்கிய நிறைவுற்ற கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக, இந்த டீயைக் குடிப்பதால் உங்கள் உடல் நலத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. உண்மையில், நீங்கள் தேங்காய் பாலில் பிளாக் டீ, க்ரீன் டீ பேக்குகளை போடும்போது, ​​​​அதில் பாலிபினோலிக் கலவைகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. இது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

பொலிவான சருமம்

ஆயுர்வேதத்தில் தேங்காய் பால் மிகவும் சத்தானதாகக் கருதப்படுகிறது. இது ஹைப்பர்லிபிடெமிக்கை சமநிலைப்படுத்தும் கூறுகளைக் கொண்டுள்ளது. தேங்காயில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக இது சருமத்திற்கு நன்மை பயக்கும். தேங்காயைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் அது சருமத்தை மேம்படுத்த உதவிடும். அதே நேரத்தில், தேங்காய் பால் டீயைக் குடிப்பதன் மூலம், உங்கள் சருமம் உயிர்ப்புடன், பளபளப்பாகவும், நீண்ட காலத்திற்கு அழகைப் பராமரிக்கவும் செய்கிறது.

உடல் எடை குறையும்

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தேங்காய் பால் டீ குடிக்க தொடங்குங்கள். ஏனென்றால், தேங்காய் பால் டீ, இளநீரைப் போல உடல் எடையை குறைக்க பெரிதும் உதவிடும். ஒரு ஆராய்ச்சியின் படி, தேங்காயில் உள்ள ஹெச்.டி.எல். கொழுப்பு மற்றும் லாரிக் அமிலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க உதவும். உண்மையில், தேங்காய் பால் டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

தேங்காய் பால் டீ தயாரிப்பது எப்படி?

தேங்காய் பால் டீ செய்ய தேவையான பொருட்கள்

  • 3 கிரீன் டீ பேக்குகள் அல்லது தேவையான அளவு பிளாக் டீ பவுடர்
  • 1 கப் தேங்காய் பால்,
  • 4 கப் தண்ணீர்
  • 2 டீஸ்பூன் கிரீம்
  • வெள்ளை அல்லது நாட்ட சர்க்கரை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
  • அதில் தேயிலை பேக்குகளை சேர்த்து கொதிக்க விடவும்.
  • இப்போது ஒரு கப் தேங்காய்ப்பால் மற்றும் கிரீம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு கிரீன் டீ பேக்குகளை அகற்றவும்.
  • இதன் பிறகு, சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்கவும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →