Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

தூக்கத்துல ஜொல்லு விடுற பழக்கம் இருக்கா? அத நிறுத்த இத ட்ரை பண்ணுங்க...

தூக்கத்துல ஜொல்லு விடுற பழக்கம் இருக்கா? அத நிறுத்த இத ட்ரை பண்ணுங்க...

நீங்கள் காலையில் தூங்கி எழும் போது, வாயின் ஓரம் வெள்ளை நிற கோடு இருக்குமா? அப்படியெனில், உங்களுக்கும் அந்த பழக்கம் இருக்கா? உலகில் இருக்கும் அனைவருக்குமே தூக்கத்தில் எச்சில் வடிவது என்பது நிச்சயம் நிகழ்ந்திருக்கும். ஒருவர் ஆழ்ந்த தூக்கத்திற்கு போகும் போது தன்மை அறியாமல் வாயில் இருந்து எச்சில் வெளிவரக்கூடும். இதனால், காலை தூங்கி எழும்போது தலையணை முழுவதும் ஈரமாக இருக்கும். அப்போது தான் அவர்களுக்கே தெரியும் எச்சில் வழிந்தது என்று. ஆனால், ஒரு சிலருக்கு தான் இது மிக சிரமமான ஒன்றாக இருக்கக்கூடும். சிலருக்கு தூக்கத்தில் அதிகப்படியான உமிழ்நீர் வடிவது பெரும் பிரச்சனையாகவே அமையலாம். ஆனால், இதற்காக கவலைப்பட ஒன்றும் தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே இதற்கான வைத்தியத்தை செய்திடலாம். இதனை செய்வதன் மூலம் இந்த பிரச்சனையில் இருந்து சுலபமாக விடுபடலாம்.

நெல்லிக்காய் பொடி

தூக்கத்தில் உமிழ்நீர் வழியும் பிரச்சனையில் இருந்து விடுபட விரும்பினால், நெல்லிக்காய் பொடியை உபயோகிக்கலாம். இதனை தொடர்ந்து செய்வதன்மூலம் சில நாட்களிலேயே பிரச்சனை தீரும். அதற்கு, இரவு உணவிற்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் சிறிது நெல்லிக்காய் பொடியை சேர்த்து கலந்து குடித்து வரவும்.

படிகாரம்
தூக்கத்தில் எச்சில் வடியும் பிரச்சனை இருப்பவர்கள், அதிலிருந்து உடனடியாக தப்பிக்க படிகாரத்தை உபயோகிக்கலாம். அதற்கு நீங்கள், படிகாரத்தை சிறிது தண்ணீரில் நன்கு கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை வாயை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் உமிழ்நீர் பிரச்சனையில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.

இலவங்கப்பட்டை
தூக்கத்தில் உமிழ்நீர் வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு மிக எளிதான வீட்டு வைத்தியம் என்றால் அது இலவங்கப்பட்டை தான். இது மிகவும் நன்மை பயக்கும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது. அதனுடன் அரை தேக்கரண்டி தேன் சேர்த்து பருகவும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். சில நாட்களில் எச்சில் வடியும் பிரச்சனை தானாகவே மறைந்துவிடும்.

துளசி இலைகள்
உறக்கத்தில் உமிழ்நீர் வடியும் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு துளசி இலைகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு 4 முதல் 5 துளசி இலைகள் தினமும் 3 முறை உட்கொள்ள வேண்டும். இதனால் உமிழ்நீர் பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →