Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

தூக்கத்தில் குறட்டை விடும் பிரச்சனை உள்ளவரா நீங்கள்? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாமே...

தூக்கத்தில் குறட்டை விடும் பிரச்சனை உள்ளவரா நீங்கள்? இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாமே...

இன்றைய காலக்கட்டத்தில் சிலருக்கு குறட்டை விடும் பிரச்சனை பெரும் தொல்லையாக இருந்து வருகிறது. இதனால் அவர் நன்றாக தூங்கினாலும், அவர் அருகே தூங்குபவர்களுக்கு பெரும் தொந்தரவாகவே இருக்கும். உண்மையில், குறட்டை என்பது உறங்கும் போது உங்கள் சுவாச அமைப்பில் சில அடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும். இதன் காரணமாக தான் இந்த சத்தம் உங்கள் உடலுக்குள் இருக்கும் திசுக்களின் அதிர்வினால் ஏற்படுகிறது. இது சரி செய்யவே முடியாத பிரச்சனை ஒன்றும் கிடையாது. உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குறட்டைப் பிரச்சனையை சுலபமாக நீக்கிட முடியும். உங்களுக்கோ அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கோ குறட்டைப் பிரச்சனை இருந்தால், இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றலாம்…

மஞ்சள்

மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. அதனாலேயே, அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்தாக கருதப்படுகிறது. குறட்டை பிரச்சனையில் கூட, குறட்டையை நிறுத்த இயற்கையான வழிகளில் மஞ்சளும் விளங்குகிறது. குறட்டைப் பிரச்சனை உள்ளவர்கள் இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கிளாஸ் மஞ்சள் பால் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. உண்மையில், மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு ஆன்டி-பயாடிக் குணங்கள் மூக்கின் அடைப்பைக் குறைக்க உதவுகிறது. இது குறட்டை பிரச்சனையை வெகுவாக குறைத்திடும்.

புதினா

குறட்டை பிரச்சனையைப் போக்க வீட்டில் உள்ள புதினா இலைகளைப் பயன்படுத்தலாம். அதற்கு, புதினா இலைகளை ஒரு டம்ளர் நீரில் சேரத்து கொதிக்க வைத்து குடிப்பதன் மூலமோ அல்லது சில துளி புதினா எண்ணெயை மூக்கில் விடுவதன் மூலமோ, குறட்டை பிரச்சனை உடனடியாக முடிவுக்கு வரும்.

ஆலிவ் எண்ணெய்

குறட்டையை போக்க சிறந்ததாக கூறப்படுவது ஆலிவ் ஆயில். அதற்கு இரவில் தூங்கும் போது சில துளிகள் ஆலிவ் எண்ணெயை மூக்கில் விட வேண்டும். இந்த எண்ணெய் வீக்கத்தை நீக்கும் பண்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக சுவாசம் எளிதாகி, குறட்டைப் பிரச்சனையை அடியோடு நீக்கிவிடும்.

தேன், இலவங்கப்பட்டை

குறட்டையை நீக்க ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் இலவங்கப்பட்டை தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கவும். இதனால் குறட்டை பிரச்சனையை சமாளிக்கலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு இதைக் குடிக்கவும். இதனைத் தொடர்ந்து குடித்து வந்தால் பல பலன்களைத் தரும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →